செவ்வாய், 30 ஏப்ரல், 2024

தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர் எடுத்துள்ள தீர்மானம்

தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் 30/௦4/2024 அன்று வவுனியா வாடிவீடு விடுதியில் ஒன்றுகூடிய தமிழர் தாயகத்தை 
பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர் பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டனர்.  
1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது.  
2. ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியை
 தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது.  
3.அதற்கு அமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது.  
4.அதற்காக சிவில் சமூகமும் தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது.  
5.தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு 
செயல்படுவது. ஒப்பம் 
வணக்கத்துக்குரிய ஆயர், திருகோணமலை மறைமாவட்டம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தென்கைலை ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் சிவகுரு ஆதீனம் பேராசிரியர் கே ரி கணேசலிங்கம் தலைவர் அரசறிவியல்துறை யாழ் பல்கலைக்கழகம்
 கலாநிதி. க. சிதம்பரநாதன், அரங்க செயற்பாட்டு குழு அருட்பணி த ஜீவராஜ் ஏசு சபை சமூக செயற்பாட்டாளர் மட்டக்களப்பு    நிலாந்தன்
 அரசியல் ஆய்வாளர் 
அருட்பணி பி ஞானராஜ் (நேரு) மனித உரிமை செயற்பாட்டாளர் மன்னார் நீதி சமாதான ஆணைக்குழு யாழ் மறை மாவட்டம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரழுச்சி இயக்கம், தமிழ்
 சிவில் சமூக அமையம், வடக்கு கிழக்கு வலிந்து 
காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம், அறிவார் சமூகம்,  திருகோணமலை அகில இலங்கை மீனவர் மற்றும் விவசாய தொழிலாளர்களின் கூட்டமைப்பு, கரைச்சி வடக்கு சமாசம் சமூக விஞ்ஞான ஆய்வு மையம், சிவில் 
அமைப்பு மட்டக்களப்பு, தமிழ் ஊடகத் திரட்டு கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாண பல்கலைக்கழக 
மாணவர் ஒன்றியம், மாவட்ட கமக்காரர் அமைப்பு, வவுனியா தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் தமிழர் கலை பண்பாட்டு மையம்,
 எம்பவர் நிறுவனம், மக்கள் மனு வடக்கு கிழக்கு
 சிவில் சமூக குழு, குரலற்றவர்களின் குரல், மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர் அமைப்பு, சமூக 
மாற்றத்துக்கான அமைப்பு, வவுனியா தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள், இணையம் திருகோணமலை புழுதி சமூக உரிமைகளுக்கான அமைப்பு, திருகோணமலை நலிவுற்ற சமூகங்களின் அபிவிருத்திக்கான 
தன்னார்வ அமைப்பு என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 29 ஏப்ரல், 2024

நாட்டில் கொக்குதொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் சிங்களவர்கள்

நாட்டில் கொக்குதொடுவாய் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை பெரும்பான்மையினர் அபகரிக்கும் செயற்பாடு
 இடம்பெற்று வருவதனை அவதானித்து சூழலியல், மற்றும் சமூக அபிவிருத்திக்கான
 நிறுவனமும் ,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினர் இன்றையதினம் நேரில் சென்று 
பார்வையிட்டிருந்தனர்.
 முல்லைத்தீவு , கொக்குதொடுவாய் பகுதியில் கோட்டக்கேணி அம்பட்டன் வாய்க்கால் ,வெள்ளக்கல்லடி,தொட்ட கண்ட குளம் போன்ற இடங்களில் குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்கள் அங்குள்ள தமிழ்மக்களுக்கு
 சொந்தமான வேறு காணிகளை துப்பரவு செய்து கொண்டிருப்பதாக கிடைக்கபெற்ற தகவலையடுத்து.29.04.2024. இன்றையதினம்கள விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். 
 குறித்த விடயத்தினை அறிந்த சூழலியல், மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தினர் , முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், பாதிக்கப்பட்ட மக்கள், குறித்த பகுதி விவசாயிகள் 
உள்ளிட்ட குழுவினர் நேரடியாக சென்று இன்றையதினம் பார்வையிட்டிருந்தனர்.
 இது தொடர்பாக களவிஜயம் மேற்கொண்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அக்காணிகளை ஏற்கனவே 
தமக்கு மகாவவலி அபிவிருத்தி அதிகாரசபை 2015ஆம் ஆண்டு தந்திருப்பதாக கூறியே பெரும்பான்மை மக்கள் துப்பரவு
 செய்கின்றார்கள். 
இதற்குரிய நடவடிக்கைகளை ரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினரே பார்க்க வேண்டும். ஆனால் அவர்கள் சென்று பார்த்ததாக
 தெரியவில்லை.
 குறித்த இடம் ஏற்கனவே தமிழ்மக்களுக்கு 
வழங்கப்பட்ட காணி. அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக நாம் கலந்துரையாடி முடிவெடுக்க இருக்கின்றோம் என தெரிவித்திருந்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

நாட்டில் மாணவியை வீட்டுக்கு அழைத்த பிரபல பாடசாலை ஆசிரியர் கைது

நாட்டில்ஹட்டன்.கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் நேற்று கினிகத்தேனை
 பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
இந்த பாடசாலையில்  11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை அவரது வீட்டுக்கு அழைத்ததாகக்  கூறப்படும் சம்பவம் தொடர்பில்  இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் 
தெரிவித்தனர் .
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்  தற்போது பணிபுரியும் பாடசாலைக்கு வருவதற்கு முன்னர் இந்த மாணவி கல்வி பயிலும் பாடசாலையில் பல வருடங்கள் பணியாற்றியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலதிக வகுப்பு முடிவடைவதற்குத் தாமதமானதால்  தான் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்றதாகவும்,
தான் அங்கு சென்ற போது ஆசிரியர் தன்னுடன் தவறாக நடந்து கொள்ளவில்லை எனவும் பாடசாலை மாணவி பொலிஸாரிடம்  வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பாடசாலை மாணவி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது    

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 27 ஏப்ரல், 2024

நாட்டில் வவுனியா புதிய பேருந்து நிலைய மலசலகூடத்தால் மக்கள் அசெளகரியம்

நாட்டில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்காக இருக்கும் இரண்டு தொகுதி மலசலகூடங்களும் சீரான முறையில் இல்லை என்பதுடன் இதில் ஒரு தொகுதி மலசலகூடம் பாவனையில் இல்லாமல் பூட்டி வைத்துள்ளனர்.
 தேசிய போக்குவரத்து அதிகாரசபையினர் வவுனியா புதிய பேருந்து நிலையமானது ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்களை கடந்த பின்னரும் இன்றுவரை பேருந்து நிலையத்தை நகரசபையின் கீழ் கொண்டுவரப்படவில்லை மக்கள் பிரதிநிதிகளே இது 
உங்களின் கவனத்திற்கு
 இந்நிலையில் பேருந்து நிலையத்தின் நிர்வாக கட்டமைப்பை தேசிய போக்குவரத்து அதிகாரசபையினரின் (NTC) கட்டுப்பாட்டிற்குள்ளேயே இன்றுவரை உள்ளது என்பதுடன் இது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளும் இதுவரை எந்த ஒரு குரலையும் கொடுக்கவில்லை என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த மலசலகூடங்கள் சுகாதார சீர்கேடாக காணப்படுவதால் நாளுக்கு பலநூற்றுக்கணக்கானோர் ஒரே மலசலகூடத்தை
 உபயோகிப்பதனால் தொற்றுநோய்களுக்கு உள்ளாக வேண்டிய நிலை காணப்படுகிறது மேலும் மலசலகூடங்களை குத்தகைக்கு வழங்காமல் அதற்கு ஒரு கட்டணத்தையும் தேசிய போக்குவரத்து அதிகாரசபையினர் அறவிடுகின்றனர்.
எனினும் மலசலகூடம் பாவனைக்கு உதவாத நிலையிலேயே காணப்படுகிறது இதேவேளை பேருந்து நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் மோட்டார்சைக்கிள்கள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்திவிட்டு பேருந்தில் பயணிப்பதால் அப்பகுதியில் பல திருட்டு சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றன என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 26 ஏப்ரல், 2024

நாட்டில் மகளையும் அவரது தோழியையும் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

நாட்டில் 12 வயது மகளையும் அவரது 11 வயது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 கிராம மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபர் கைது 
செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர்.
 சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 25 ஏப்ரல், 2024

நாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு பலர் கைது

2024ஆம் ஆண்டின் 4 மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 1371 முறைப்பாடுகள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்துள்ளன.  
முறையான உரிமம் இல்லாமல் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தல், சரியான வேலை உத்தரவு இல்லாமல் வெளிநாட்டு வேலைகளை வழங்குவதற்காக பணம் வசூலித்தல், சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைகளுக்கு மக்களை வழிநடத்துதல் போன்ற புகார்கள் பணியகத்திற்கு கிடைத்துள்ளன. 
பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 495 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் இக்காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளதுடன், 53,509,520.00 பணத்தையும் விசாரணை அதிகாரிகள் 
மீட்டுள்ளனர்.  
மேலும் 680 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்காக மோசடி செய்பவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரவும் பணியகம் நடவடிக்கை
 எடுத்துள்ளது. 
இதன்போது, ​​வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் 28 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், முறையான அனுமதிப்பத்திரம் இன்றி
 இயங்கி வந்த மற்றும் 
முறையான பணி உத்தரவைப் பெறாமல் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்த 8 முகவர் நிலையங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 
பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு. வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடும் இலங்கையர்களின் போக்கு தற்போது காணப்படுவதாகவும், இதனால்  வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.  
பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு வெளிநாட்டு 
தொழிலாளர் கடத்தல் தொடர்பான சோதனைகளை 
விரிவுபடுத்தியுள்ளதுடன், புலனாய்வுப் பிரிவின் கடமைகளை மக்களின் வசதிக்காக பரவலாக்குவதற்கும் நடவடிக்கை 
எடுத்துள்ளது. 
மேலும், பணியகத்தின் 24 மணி நேர தகவல் மையத்திற்கு 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மற்றும் தனிநபர்கள் பற்றிய தகவல்களை பணியகத்தின் சிறப்பு புலனாய்வு திணைக்கள தொலைபேசி இலக்கமான 0112864118க்கு அழைப்பதன் மூலம் வழங்க முடியும்.
என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 24 ஏப்ரல், 2024

நாட்டில் வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (24.04) மதியம் 12.30 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போர்ட்டத்தில் ஈடுபட்டனர். 
தமக்கான பிக்கு வரத்து கொடுப்பனவு மற்றும் காகிதத்தை கொடுப்பணவுகளை வழங்குமாறு கோரி இக் கவனயீர்ப்பில் 
ஈடுபட்டனர்.  
இதன்போது பதாதைகளை தாங்கிய இருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதன் பின் கலைந்து சென்றனர்
.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




Blogger இயக்குவது.